புதுடெல்லி: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த வாரம் பிரான்ஸ், இத்தாலி நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். இந்தியா-இத்தாலி இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கடந்த மார்ச் மாதம் கையெழுத்தாகின. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, இந்திய கப்பற்படைக்காக பிரான்ஸ் 3 ஸ்கார்பியன் நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பது, போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களுக்கான எந்திரங்களை கூட்டு முயற்சியில் தயாரிப்பது உள்ளிட்டவற்றில் இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதாக அறிவித்தார்.
இந்நிலையில், ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அரசுமுறை பயணமாக அடுத்த வாரம் பிரான்ஸ், இத்தாலி நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் பயணத் தேதி இன்னும் முடிவாகவில்லை என்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பயணத்தின் போது, பிரான்ஸ், இத்தாலி நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் கூட்டு போர் பயிற்சி, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உத்திகளை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் ராஜ்நாத் கலந்து ஆலோசிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.
The post அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த வாரம் பிரான்ஸ் பயணம் appeared first on Dinakaran.
