×

பள்ளி மாணவர்களுடன் ஒன்றிய அமைச்சர் சந்திப்பு:சந்திரயான் மாதிரி விண்கலத்தை நினைவு பரிசாக கொடுத்தார்

 

கோவை, அக்.4: கோவை பாரதி காலனி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘பள்ளிக்கு வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சந்திரயான் 3 நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த விண்கலத்தின் மாதிரி வடிவத்தை ஸ்கேல் டவுன் செய்து இங்கே கொண்டு வந்திருக்கின்றேன். சந்திரயான் 3 விஞ்ஞானியான வீரமுத்துவேல் இந்த பள்ளியில்தான் சில காலம் வேலை செய்து உள்ளார்.

மேலும் சந்திராயன் திட்டத்தில் உங்கள் பள்ளியில் படித்த சந்திரபிரபா என்ற பெண் பணியாற்றி வருகிறார். எனவே நீங்களும் சிறப்பாக படித்தால் நாளை நீங்களும் இதுபோல பல்வேறு துறைகளில் சாதிக்கலாம். சந்திராயன் நிலவின் தென்பகுதியில் தரை இறங்கி சாதனை செய்துள்ளது. வேறு நாடுகள் யாரும் இதை செய்யவில்லை. அங்கே என்ன இருக்கின்றது என்பதையும், அங்கே இருக்கும் மண் என்ன வகையானது என்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றது.

குறிப்பாக 2047ல் இந்தியா முன்னேறிய நாடாக இருக்கும். எனவே அனைவரும் பங்களிப்பு கொடுக்க வேண்டும். நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும்,’’ என்றார். சந்திரயான் 3 விண்கலத்தின் மாதிரியை மாணவர்களுக்கு காண்பித்தார். தொடர்ந்து மாணவிகளிடம் அந்த மாதிரி விண்கலத்தை பள்ளிக்கு நினைவு பரிசாக கொடுத்தார்.

The post பள்ளி மாணவர்களுடன் ஒன்றிய அமைச்சர் சந்திப்பு:சந்திரயான் மாதிரி விண்கலத்தை நினைவு பரிசாக கொடுத்தார் appeared first on Dinakaran.

Tags : Union ,Chandrayaan ,Coimbatore ,Union Finance Minister ,Bharathi Colony ,Union Minister ,
× RELATED பாஜ நிர்வாகி வீட்டில் ரூ.1.50 கோடி கொள்ளை: கோவையில் பரபரப்பு