×

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேறாதவர்களுக்கு ஆறுதல்

 

கோவை, மே 21: கோவை மாநகராட்சி மேல்நிலை பள்ளிகளில் பயின்று, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகள் மறுதேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான சிறப்பு பயிற்சி வகுப்பு ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நேற்று நடந்தது. இதை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் துவக்கிவைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் கவலைப்படக்கூடாது. நீங்கள் உங்கள் நம்பிக்கையை தளர விடக்கூடாது.

மறுதேர்வு எழுதி நிச்சயம் தேர்ச்சி பெற முடியும். அதற்கான சிறப்பு வகுப்புகள் கடந்த 10ம்தேதி முதல் நடந்து வருகிறது. இதில், முழு ஈடுபாட்டுடன் பயின்று, வரும் 26.06.2024 அன்று நடைபெற உள்ள மறுேதர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தொடர்ந்து, கல்லூரிகளில் சேர்ந்து, உங்களது மேற்படிப்பை தடையின்றி தொடர வேண்டும். கல்விதான் நாம் வாழ்வின் உயர்வுக்கான அடிப்படை. கல்வி ஒன்று மட்டுமே இறுதி வரை நமது கூடவே இருக்கும்.

கல்விக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளித்து, உங்கள் வாழ்வில் மென்மேலும் உயர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை கமிஷனர் செல்வசுரபி, மாநகராட்சி கல்வி அலுவலர் தாமஸ் சேவியர், மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள், பயிற்சி வகுப்பு ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேறாதவர்களுக்கு ஆறுதல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,RS Puram Corporation ,Art Gallery ,Sivaguru ,
× RELATED கோவை பந்தய சாலை நடைபாதையில் இருந்த...