×

ரூ. 1.25 லட்சம், 5 பவுன் திருட்டு

கோவை, மே 22: கோவை வெள்ளமடை அருகேயுள்ள காமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் மனைவி சிந்து (32). இவர்கள் பீளமேடு நேரு நகரில் மளிகை கடை நடத்தி வந்தனர். தொழில் நஷ்டம் காரணமாக மனம் உடைந்த பொன்ராஜ், சிந்து ஆகியோர் விஷம் குடித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில், இந்த மளிகை கடையின் கட்டிட உரிமையாளர் ரங்கராஜன், கவிதா உள்ளிட்ட சிலர் பூட்டை உடைக்கு கடைக்குள் சென்று கடையில் இருந்த 5 பவுன் தங்க நகை, 1.25 லட்ச ரூபாய், வீட்டு பத்திரம், ஜிஎஸ்டி ஆவணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை எடுத்து சென்று விட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக சிந்து அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் கடை பூட்டை உடைத்து திருடிய நபர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். கடை வாடகை தராமல் 2 மாதத்திற்கு மேலாக கடையை பூட்டி வைத்திருந்ததால் அத்துமீறி நுழைந்து பொருட்களை இவர்கள் எடுத்து சென்று விட்டதாக தெரிகிறது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post ரூ. 1.25 லட்சம், 5 பவுன் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Ponraj ,Kamanayakkanpalayam ,Vellamatai, Coimbatore ,Sindhu ,Beelamedu Nehru Nagar ,Dinakaran ,
× RELATED பதிவுத்துறையில் 2 அதிகாரிகளை...