×

ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் கதிர்வீச்சு சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்தரங்கம்

 

கோவை, மே 21: கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் தமிழ்நாடு கதிர்வீச்சு சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநர்களின் 2வது கருத்தரங்கம் நடைபெற்றது. இம்மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். ஜி. மனோகரன் இக்கருத்தரங்கை துவக்கி வைத்தார்.

‘கதிர்வீச்சு சிகிச்சை தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் – கோட்பாட்டிலிருந்து யதார்த்தமான நடைமுறை வரையில்’ என்ற கருத்தினை மையப்பெருளாக கொண்டு இக்கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளிலிருந்து சுமார் 200 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இவர்கள் நடைமுறைகள் மற்றும் ஆழமன நுண்ணறிவுகளைப் பெற்றனர்.

The post ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் கதிர்வீச்சு சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Radiation Therapy Technicians Seminar ,GKNM ,Hospital ,Coimbatore ,Tamil ,Nadu Radiation ,Therapy Technicians ,GKNM Hospital ,Dr. ,G. Manokaran ,Radiation Therapy Technologists Seminar ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் உரிமை கோராத 26 உடல்கள் ஒரேநாளில் அடக்கம்