×

நமது உயிரை பாதுகாக்க போராடும் கீழ்வேளூரில் தூய்மை நிகழ்ச்சி

கீழ்வேளூர்: காந்தி பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை தூய்மையே சேவை நிகழ்ச்சி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக அக்டோபர் 1ம் தேதி பொதுமக்கள் பங்களிப்புடன் துய்மை செய்யும் நிகழ்ச்சி நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி சார்பில் கீழ்வேளூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில் நேற்று நடைபெற்றது. இப்பணியில் பேரூராட்சி செயல் அலுவலர் குகன், பேரூராட்சி தலைவர் இந்திராகாந்திசேகர், துணைத்தலைவர் சந்திரசேகரன், பேருராட்சி உறுப்பினர்கள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், தன்னனார்வளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இப்பணியின் மூலம் சேகரிக்கப்பட்ட குப்பைகள் மறு சுழற்சிக்காக கீழ்வேளூர் பேரூராட்சி அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது.

The post நமது உயிரை பாதுகாக்க போராடும் கீழ்வேளூரில் தூய்மை நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kilvellur ,Killyvellur ,Gandhi ,
× RELATED நாகப்பட்டினம் எஸ்பி தகவல் ஜீவனாம்சம்...