×
Saravana Stores

கீழ்வேளூர் அருகே மேலஇலுப்பூர் பிடாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம்

 

கீழ்வேளூர், ஜூலை 20: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த மேல இலுப்பூர் கிராமத்தில் பிடாரி அம்மன், மன்மதன் சாமி, பன்றிகுத்தி அய்யனார் கோயில்கள் உள்ளது. இக்கோயில்களில் குடமுழுக்கு கடந்த ஜூன் 2ம் தேதி நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாள் மண்டல அபிஷேகம் நடைபெற்று நேற்று நிறைவேற்று மண்டலபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது. நேற்று காலை அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பால் குடம் ஊர்வலம் நடைபெற்றது இதில் 50-க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டனர்.

பின்னர் சுவாமிகளுக்கு 100 லிட்டர் பால் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மண்டலாபிஷேக பூர்த்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராமவாசிகள, விழா குழுவினர் செய்து இருந்தனர்.

 

The post கீழ்வேளூர் அருகே மேலஇலுப்பூர் பிடாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Mandala Abhishekam ,Pitariyamman Temple ,Melilupur ,Kilivelur ,Mela Ilupur ,Nagai District ,Bidari Amman ,Manmadan ,Sami ,Chaikkuthi Ayyanar ,Kumbabhishekam ,Melilupur Pitariyamman Temple ,Kilvellur ,
× RELATED ராமேஸ்வரம் கோயிலில் மண்டலாபிஷேகம்