×

செட்டிப்பாளையம் தடுப்பணை அருகே அமராவதி ஆற்றில் கலக்கும் தொழிற்சாலை கழிவுநீர்

கரூர், செப். 29: கரூர் மாவட்டம் செட்டிப்பாளையம் தடுப்பணை அருகே அமராவதி ஆற்றில் தொழிற்சாலை ஒன்றின் கழிவு நீர் கலப்பதாக வந்த தகவலையடுத்து அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலைப்பகுதியில் இருந்து அமராவதி அணை கரூர் வழியாக வந்து திருமுக்கூடலூரில் காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த அமராவதி ஆற்றின் மூலம் திருப்பூர், கோவை, கரூர் ஆகிய 3 மாவட்டங்களில் பாசனவசதி பெற்று வருகிறது.

கரூர் மாவட்டத்தில் இந்த ஆறு, கொத்தம்பாளையம், ராஜபுரம், செட்டிப்பாளையம், சுக்காலியூர், சின்னாண்டாங்கோயில், பசுபதிபாளையம் வழியாக திருமுக்கூடலூரிர் சென்று காவிரியில் கலக்கிறது.
இந்த அமராவதி ஆற்றின் மூலம் விஸ்வநாதபுரி, அப்பிபாளையம், கருப்பம்பாளையம், சுக்காலியூர் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெற்று வருகிறது, மேலும், செட்டிப்பாளையம் தடுப்பணை அருகே கிணறுகள் மூலம் தண்ணீர் பம்ப் செய்யப்பட்டு குடிநீர் விநியோகமும் செய்யப்படுகிறது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பகுதியில் உள்ள ஒரு தோல் தொழிற்சாலையில் இருந்து விடப்படும் கழிவு நீர் அமராவதி ஆற்றில் வந்து செட்டிப்பாளையம் தடுப்பணை அருகே வந்து தேங்கி நிற்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. எனவே, சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு கழிவுநீர் கலக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

The post செட்டிப்பாளையம் தடுப்பணை அருகே அமராவதி ஆற்றில் கலக்கும் தொழிற்சாலை கழிவுநீர் appeared first on Dinakaran.

Tags : Amaravati river ,Chettipalayam ,Karur ,Karur District ,Dinakaran ,
× RELATED 5,446 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ₹1000...