×

கீரிப்பிள்ளைகளை வேட்டையாடிய வாலிபர் கைது வனத்துறையினர் நடவடிக்கை பேரணாம்பட்டு அருகே வனப்பகுதியில்

பேரணாம்பட்டு, செப்.29: பேரணாம்பட்டு அருகே வனப்பகுதியில் கீரிப்பிள்ளைகள் மற்றும் கள்ளி காகத்தை வேட்டையாடிய வாலிபரை வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். பேரணாம்பட்டு வனப்பகுதியில் இருந்து கீரிப்பிள்ளைகள் வேட்டையாடப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின்பேரில் வனவர் சரவணன் மற்றும் வனத்துறையினர் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, மொர்சபல்லி அடுத்த பனந்தோப்பு ரோடு வழியாக பைக்கில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, அவரை பைக்கை சோதனை செய்ததில் 3 கீரிப்பிள்ளைகள் மற்றும் ஒரு கள்ளி காகத்தை பனந்தோப்பு காப்புக்காட்டில் வேட்டையாடி கொண்டு வந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தை சேர்ந்த நரிக்குறவர் சின்னத்தம்பி(22) என்பது தெரியவந்தது. இதையடுத்து, வனத்துறையினர் அவரிடம் இருந்து கீரிப்பிள்ளைகள், கள்ளி காகம், பைக் மற்றும் வேட்டையாட பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், வனச்சரகர் சதீஷ்குமார் உத்தரவின்பேரில் வனவர் சரவணன் இதுகுறித்து வழக்கு பதிந்து சின்னத்தம்பியை கைது செய்து சிறையில் அடைத்தார்.

The post கீரிப்பிள்ளைகளை வேட்டையாடிய வாலிபர் கைது வனத்துறையினர் நடவடிக்கை பேரணாம்பட்டு அருகே வனப்பகுதியில் appeared first on Dinakaran.

Tags : forest department ,Peranampatu ,Dinakaran ,
× RELATED கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 26வது நாளாக வனத்துறை தடை