×

கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம்

தில்லைநகர், செப்.28: திருச்சி உறையூர் குழுமணி ரோடு சுப்பிரமணிய நகரில் வசித்து வருபவர் அசாருதீன் (29). இவருக்கு நஜ்மா (19) என்ற மனைவியும், பைசல் என்ற ஐந்து மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

கடந்த 24ம்தேதி அன்று நஜ்மா கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த அவரது கணவர் அசாருதீன், உறையூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து கைக்குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றார்

The post கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Thillanagar ,Azharuddin ,Subramania Nagar, Varayur Group Road, Trichy ,Najma ,Mayam ,
× RELATED ஆசிரியரிடம் வழிப்பறி வழக்கில் 2 இளைஞர்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறை