×

பெரம்பலூர் மாவட்டத்தில் செப்.28, அக் 2ல் டாஸ்மாக் விடுமுறை

பெரம்பலூர்,செப்.26: ‘‘பெரம்பலூர் மாவட்டத்தில் மிலாடிநபி மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் தனியார் மது பானக் கூடங்கள் அனைத்திற்கும் செப்.28 மற்றும் அக்.2 ஆகிய 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது,’’ பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், சில்லறை விற்பனைக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் அனைத்திற்கும் மிலாடி நபியினை முன்னிட்டு (28ம் தேதி) வியாழக்கிழமை அன்றும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்.2ம் தேதி அன்றும் இரண்டு நாட்களுக்கு உலர் தினமாக, விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு கேள்வி எழவில்லையா?
தமிழக அரசின் மூலம் மிகவும் தரமான அரிசி அனைவருக்கும் வழங்கப்படுகிறது. அப்படிப்பட்ட தரமான அரிசியில் இதுபோன்ற வெள்ளை நிற அரிசிகள் கிடப்பது ஏன்? என்று உங்களுக்கு கேள்வி எழவில்லையா?. அரிசியினை கழுவும்போது தண்ணீரில் மிதக்கின்றது என்ற காரணத்திற்காக அந்த அரிசிகளை துாக்கி எறியாதீர்கள் என்றார் கலெக்டர்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் செப்.28, அக் 2ல் டாஸ்மாக் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Tasmak ,Perambalur district ,Perambalur ,Miladinabi ,Gandhi Jayanti ,Tasmac ,Dinakaran ,
× RELATED அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்...