×

கரூர் மாவட்டத்தில் மளிகை, டீக்கடையில் குட்கா மறைத்து வைத்து விற்பனை

கரூர், செப். 26: கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகை, டீக்கடை போன்றவற்றில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்ததாக 10 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வது சம்பந்தமாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதே போல், அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதனடிப்படையில், வெங்கமேடு, வாங்கல், கருர் டவுன், பசுபதிபாளையம், வெள்ளியணை, வேலாயுதம்பாளையம், தென்னிலை, சின்னதாராபுரம், க.பரமத்தி, மாயனூர் ஆகிய பகுதி காவல் நிலைய போலீசார் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் தீவிர சோதனை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், இந்த பகுதிகளில் உள்ள மளிகை கடை, பெட்டிக்கடை, டீக்கடைகளில் மறைத்து வைத்து குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக 10 பேர் மீது வழக்கு பதிந்து, இவர்களிடம் இருந்து 2 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கரூர் மாவட்டத்தில் மளிகை, டீக்கடையில் குட்கா மறைத்து வைத்து விற்பனை appeared first on Dinakaran.

Tags : Karur district ,Teaksha ,Karur ,Dinakaran ,
× RELATED முன்னாள் படை வீரர்கள் வாரிசுகளுக்கு வாய்ப்பு