×

அதிதீவிரப்படை பயிற்சி முடித்த முதல் திருநங்கை

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட காவல்துறையில், ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் திருநங்கை ரூபா. இவர் மேட்டூர் அதிதீவிரப்படை பயிற்சி பள்ளியில், 8 வார காலம் நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்டார். பயிற்சியை சிறப்பாக முடித்து, தமிழ்நாட்டில் அதிதீவிரப்படை பயிற்சி முடித்த முதல் திருநங்கை என்ற சிறப்பை ரூபா பெற்றுள்ளார். இவரை மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் பாராட்டினார். அப்போது, ஆயுதப்படை டிஎஸ்பி இளங்கோவன், இன்ஸ்பெக்டர் முரளிகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

The post அதிதீவிரப்படை பயிற்சி முடித்த முதல் திருநங்கை appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Rupa ,Namakkal District Police ,Mettur Special Forces Training School ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்