×

பைக் மீது டிராக்டர் மோதி 2 வாலிபர்கள் பலி மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை போளூர் அருகே பரிதாபம்

போளூர், செப்.22: போளூர் அருகே பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியாகினர். படுகாயம் அடைந்த மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரம், பொன்னுசாமி தெருவை சேர்ந்தவர் விஷ்வா(18), சிவராஜ் நகரை சேர்ந்தவர் சஞ்சய்குமார்(20), வெண்மணி கிராமத்தை சேர்ந்தவர் ஆகாஷ்(20). நண்பர்களான 3 பேரும் கூலி தொழிலாளிகள். இந்நிலையில், நேற்று முன்தினம் ஆகாஷின் பைக்கில் 3 பேரும் போளூரில் இருந்து சேத்துப்பட்டு நகருக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மட்டப்பிறையூர் கூட்ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக இவர்களது பைக் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், விஷ்வா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், சஞ்சய்குமார், ஆகாஷூக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததும், மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ஆகாஷ் இறந்தார். சஞ்சய்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போளூர் சப்- இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார். பைக் விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post பைக் மீது டிராக்டர் மோதி 2 வாலிபர்கள் பலி மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை போளூர் அருகே பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Polur ,Bolur ,Dinakaran ,
× RELATED ஆட்டோ- தனியார் பஸ் மோதி பூண்டு வியாபாரிகள் 2 பேர் பலி: போளூரில் பரிதாபம்