- டி.ஜே.எஸ் இன்ஜினியரிங் கல்லூரி
- பெருவயல்
- Kummidipoondi
- ஜே. எஸ் பொறியியல் கல்லூரி
- அண்ணா பல்கலைக்கழகம்
- தின மலர்
கும்மிடிப்பூண்டி: பெருவாயல் பகுதியில் உள்ள டிஜெஎஸ் பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரியில் இந்த கல்வி ஆண்டின் வகுப்புகள் துவங்கியுள்ளது. இந்நிலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டிஜெஎஸ் பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு நேற்றுமுன்தினம் நடந்தது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு கல்வி குழும தலைவரும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.
இந்த கல்வி குழும செயலாளர் டி.ஜெ.ஆறுமுகம், துணை தலைவர் டி.ஜெ.தேசமுத்து, இயக்குனர்கள் ஏ.பழனி, ஏ.விஜயகுமார், ஏ.கபிலன், டி.தினேஷ், டி.ஜெ.தமிழரசன், நிர்வாக அலுவலர் ஏழுமலை முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் வரவேற்றார். தொடர்ந்து கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் தங்கள் அனுபவங்ளை புதிய மாணவர்களிடம் பகிர்ந்துக் கொண்டனர். நிகழ்வில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பேசும்போது, கல்வி மட்டுமே மாணவர்களை வாழ்வில் உயர்த்தும். மாணவர்கள் கல்லூரி பருவத்தில் நல்ல ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை கற்பதோடு, கல்லூரி பருவத்தில் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என பேசினார்.
மேலும், சிறப்புரை ஆற்றிய பேச்சாளர் அருள் பிரகாஷ் பேசும்போது, கல்லூரியில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் தாழ்வு மனப்பான்மையை களைந்து, அவர்கள் படிக்கும் துறையில் சிறந்தவர்களாக திகழ, துவக்கம் முதலே முனைப்போடு கற்க வேண்டும், பொறியியல் படிப்பு எப்போதும் தோற்ககூடாது, பொறியியல் கல்வி கற்பவர்கள் அறிவை பட்டை தீட்டி புதிய கண்டுபிடிப்பவர்களாய் இருக்க வேண்டும் என பேசினார். நிகழ்வின் முடிவில், முதலாண்டு மாணவர்களுக்கு புத்தக பை, கல்வி உபகரணங்களை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார்.
The post பெருவாயல் பகுதியில் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு appeared first on Dinakaran.