×

வசதி இருந்தும் திருப்பி செலுத்தாத கடன் மோசடியாளர்கள் விதிமுறையில் மாற்றம்: கருத்து கேட்கிறது ரிசர்வ் வங்கி

மும்பை: வங்கிகளில் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்த வசதியும், திறனும் இருந்தும் சில தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு வேண்டுமென்றே கடன் செலுத்தாதோரை வகைப்படுத்தும் மற்றும் அடையாளம் காணும் செயல்முறையை மேம்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி சில விதிமுறைகளை மாற்றி பரிந்துரைத்துள்ளது. அதன்படி, ரூ.25 லட்சத்திற்கு மேல் கடன் பெற்று, வசதியிருந்தும் திருப்பி செலுத்தாதவர்கள் இந்த வரையறைக்கும் வகைப்படுத்தப்படுவார்கள். வராக்கடன் என அறிவிக்கப்பட்ட அடுத்த 6 மாதத்திற்குள் கடன் பெற்றவர், ‘வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர்’ என அறிவிக்கப்பட வேண்டும். வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர் என அறிவிக்கப்பட்டவர் எந்த நிறுவனத்தின் வாரியத்திலும் உயர் பதவி வகிக்க முடியாது. இந்த மாற்றங்கள் குறித்து வரும் அக்டோபர் 31ம் தேதி வரை கருத்துக்களை தெரிவிக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

The post வசதி இருந்தும் திருப்பி செலுத்தாத கடன் மோசடியாளர்கள் விதிமுறையில் மாற்றம்: கருத்து கேட்கிறது ரிசர்வ் வங்கி appeared first on Dinakaran.

Tags : Reserve Bank ,Mumbai ,Dinakaran ,
× RELATED உத்தராகண்டில் லேசான நிலநடுக்கம்