×

ஆவணப்பட இயக்குனரான ஒடிசா முதல்வரின் சகோதரி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி: சினிமா தயாரிப்பாளரான ஒடிசா முதல்வரின் சகோதரி கீதா மேத்தா டெல்லியில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஒடிசா முதல்வரும், பிஜூ ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக்கின் சகோதரி கீதா மேத்தா (80), அவரது குடும்பத்தினருடன் டெல்லியில் வசித்து வந்தார். வயது முதிர்வின் காரணமாக டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கீதா மேத்தா காலமானார்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, அவரது சகோதரரான நவீன் பட்நாயக், ஒடிசா ஆளுநர் கணேஷி லால் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குனரும், திரைப்படத் தயாரிப்பாளருமான கீதா மேத்தா, மாணவ பருவத்தில் இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்தார். உயர்கல்வி படிப்பை இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தார். பிரபலமான புத்தகங்களை எழுதிய கீதா மேத்தா, சில சினிமாக்களையும் தயாரித்துள்ளார். இவரது மறைவு திரைத்துறையினர் மட்டுமின்றி, அரசியல், இலக்கியம், மொழியியல், இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post ஆவணப்பட இயக்குனரான ஒடிசா முதல்வரின் சகோதரி மரணம்: பிரதமர் மோடி இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Odisha ,CM ,PM Modi ,New Delhi ,Geeta Mehta ,Chief Minister ,Delhi ,
× RELATED பிளஸ்2 தேர்வில் மாணவர்கள் முறைகேடு...