×

அண்ணா பிறந்தநாள் விழா அமைச்சர் சு.முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை

ஈரோடு,செப்.16: அண்ணா பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் அவரது சிலைக்கு திமுக சார்பில் அமைச்சர் சு.முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அண்ணாவின் சிலைக்கு திமுக சார்பில் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான சு.முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கந்தசாமி, மாநில நிர்வாகிகள் அந்தியூர் செல்வராஜ், சந்திரகுமார், சச்சிதானந்தம், குறிஞ்சி சிவக்குமார், வீரமணி, மாவட்ட நிர்வாகிகள் குமார்முருகேஷ், செந்தில்குமார்,பழனிசாமி, சின்னையன், செல்லபொன்னி, மாநகர செயலாளர் சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் திண்டல் மணிராசு, வில்லரசம்பட்டி முருகேசன், மகளிரணி நிர்வாகிகள் திலகவதி, கனிமொழி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் திருவாசகம், துணை மேயர் செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் ராமச்சந்திரன், பெரியார்நகர் சுந்தர்ராஜன், முன்னாள் நகர செயலாளர் பொன்னுசாமி, தொமுச கவுன்சில் செயலாளர் கோபால், தலைமைக்கழக பேச்சாளர் இளையகோபால், பெரியார்நகர் பகுதி கழக செயலாளர் அக்னிசந்துரு, கலை இலக்கிய பகுத்தறி பேரவை அமைப்பாளர் பிரகாஷ் மற்றும் கவுன்சிலர்கள், மாவட்ட, மாநகர நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போல அதிமுக, மதிமுக, அமமுக, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதே போல திமுக தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட வார்டுகள், பகுதி கழகம், ஒன்றியம் ,மாநகரம் என பல்வேறு பகுதிகளில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

The post அண்ணா பிறந்தநாள் விழா அமைச்சர் சு.முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.

Tags : Anna ,Minister ,Su Muthusamy ,Erode ,DMK ,S.Muthusamy ,Erode. ,Tamil Nadu ,S. Muthuswamy ,
× RELATED புயல், கனமழை காரணமாக செமஸ்டர் தேர்வு தள்ளிப்போகிறது