×

பல்கலை. துணை வேந்தரை நியமிக்க ஆளுநருக்கு உரிமை உண்டு: அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி

கொல்கத்தா: மாநில பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதற்கு ஆளுநருக்கு உரிமை இருக்கிறது என்று ஒன்றிய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர் மற்றும் மாநில அரசிடையே மோதல் போக்கு நிலவி வருகின்றது.

இந்நிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘‘மற்ற மாநிலங்களில் ஆளுநர் மாநில பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கிறார். மேற்கு வங்கத்திலும் பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிப்பதில் ஆளுநருக்கு உரிமை உள்ளது. ஆளுநரை விமர்சிப்பதை விட பல்கலைக்கழக வளாகங்களை தூய்மையாக வைப்பதிலும், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த மாணவரின் மரணம் போல மீண்டும் நிகழாமல் தடுப்பதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.” என்றார்.

The post பல்கலை. துணை வேந்தரை நியமிக்க ஆளுநருக்கு உரிமை உண்டு: அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Governor ,Minister ,Dharmendra Pradhan ,Kolkata ,Union ,Dharmendra ,Dinakaran ,
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...