×

வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கக்கோரி தொடர் முழக்க போராட்டம்

 

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றிய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்போரூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்கக்கோரி கோரிக்கை முழக்க போராட்டம் நேற்று பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. மா.கம்யூ கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான சின்னதுரை உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது திருப்போரூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க வேண்டும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

The post வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கக்கோரி தொடர் முழக்க போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Tirupporur ,Tirupporur Union Marxist Communist Party ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ