×

மாற்றுத்திறனாளிகளின் குறைதீர்க்க புதிய வசதி: இணையதளம் அறிமுகம்

புதுடெல்லி: மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகளை தீர்ப்பதற்கான செயல்முறையை எளிமைப்படுத்தவும் விரைவுபடுத்தவும் ஒன்றிய அரசு புதிய இணையதள வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையர் அலுவலகத்தால் (சிசிபிடி) உருவாக்கப்பட்ட இந்த ஆன்லைன் கண்காணிப்பு இணையதள பக்கத்தை, ஒன்றிய சமூக நீதி இணை அமைச்சர் பிரதிமா பூமிக் தொடங்கி வைத்தார்.

இந்த இணையதள வசதி குறித்து விளக்கிய மூத்த அதிகாரி ஒருவர், ‘‘இது நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கையாளும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தும். குறைதீர் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவதோடு வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்து தீர்வு பெறுவதை விரைவுபடுத்தும். இதில் தடையற்ற ஆன்லைன் புகார் தாக்கல், முற்றிலும் டிஜிட்டல் செயல்முறை, நினைவூட்டல்கள், இ-கோர்ட் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளன’’ என்றார். இந்த இணையதள பக்கத்தை சிசிபிடியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அணுகலாம்.

The post மாற்றுத்திறனாளிகளின் குறைதீர்க்க புதிய வசதி: இணையதளம் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union Government ,Dinakaran ,
× RELATED கைவிரல்கள் இல்லாதவர்களுக்கு மாற்று...