×

தனியார் நிறுவன அதிகாரியை தாக்கியவர் கைது

ஓசூர், செப்.9: ஓசூர் மூக்கண்டப்பள்ளி அரசனட்டியைச் சேர்ந்தவர் இளையராஜா (31). தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 6ம் தேதி, மூக்கண்டப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த பசுபதி (21) என்பவர், டூவீலரில் வேகமாக அங்கு வந்து நிறுத்தினார். அவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இளையராஜா, எதற்காக டூவீலரை நிறுத்துகிறாய் என கேட்டதில், வாக்குவாதம் முற்றி பசுபதி, இளையராஜாவை தாக்கினார். இதில் காயமடைந்த அவர் அளித்த புகாரின் பேரில், சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பசுபதியை கைது செய்தனர்.

The post தனியார் நிறுவன அதிகாரியை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Hosur ,Ilayaraja ,Mookandapalli Aranatti ,Dinakaran ,
× RELATED ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை