×

வடமாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

 

ஈரோடு, செப். 4: பீகார் மாநிலம் மதுபானி ராம்கன்ச் பகுதியை சேர்ந்த சியாம்சுந்தர் யாதவ் மகன் சந்தோஷ் குமார்(24). இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் ஆனது. சந்தோஷ் குமார் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஈரோடு வந்து, மேட்டுக்கடை வேப்பம்பாளையம் பிரிவில் தங்கி, அங்குள்ள டீ கடையில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்தார்.

சந்தோஷ்குமார் கடந்த 1ம் தேதி இரவு மது குடித்துவிட்டு அவரது அம்மாவிடம் போனில் சண்டையிட்டுள்ளார். பின்னர், மனவேதனையடைந்த சந்தோஷ்குமார் நேற்று முன்தினம் அதிகாலை பாத்ரூமில் இருந்த இரும்பு கம்பியில் துணியால் தூக்கிட்டு தற்கொலை முயன்றார். உடல் பாரம் தாங்காமல் துணி கிழிந்து கீழே விழுந்து சந்தோஷ்குமார் இறந்து கிடந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வடமாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Erode ,Santhosh Kumar ,Shyamsundar Yadav ,Madhubani Ramkanch ,Bihar ,Dinakaran ,
× RELATED தெளிவு பெறுஓம்: மரணத்தைக் கண்டு அஞ்சாதவர்கள் இருக்கிறார்களா?