சோழவந்தான், செப். 3: சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கீழப்பட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி இந்து ரஞ்சித்- லாவண்யா. இவர்களுக்கு ஏற்கனவே 13 மாத பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த ஆக. 6ம் தேதி மற்றொரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று இவர்களின் தோட்டத்தில் தம்பதி வேலை பார்த்து கொண்டிருந்தனர். லாவண்யா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து தூங்க வைத்து விட்டு, மீண்டும் வந்து பார்த்த போது குழந்தை அசைவற்று கிடந்துள்ளது.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து நடுமுதலைக்குளம் கிராம செவிலியர் பேச்சி விக்கிரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்ஐ முருகேசன் வழக்குப்பதிவு செய்து இயற்கை மரணமா அல்லது வேறு காரணமா என விசாரணை நடத்தி வருகிறார். பிறந்து 28வது நாளில் பெண் குழந்தை இறந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.
The post சோழவந்தான் அருகேபெண் குழந்தை திடீர் மரணம் appeared first on Dinakaran.