×

சேலத்தில் 351.13 மில்லி மீட்டர் மழை

சேலம், செப்.2: சேலம் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி 351.13 மில்லி மீட்டர் மழை பெய்தது. அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 92 மில்லி மீட்டர் மழை பதிவானது. தொடர் மழையால் சாலைகள் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. சேலத்தில் நேற்றுமுன்தினம் மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இரவிலும் மழை நீடித்தது. இம்மழையால் கிச்சிப்பாளையம் மெயின் ரோட்டில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. கலெக்டர் அலுவலகத்தில் மழைநீர் தேங்கியது. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலை, தெருக்களில் மழைநீர் தேங்கியதால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

பலத்த மழை காரணமாக பல இடங்களில் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து சாலையில் பெருக்கெடுத்தது. பல இடங்களில் நேற்று காலை வரை மழைநீர் வடியாமல் இருந்தது. கல்லாங்குத்தில் லாரி ஒன்று பள்ளத்தில் சிக்கியது. பல மணி நேர போராட்டத்திற்கு அந்த லாரி மீட்கப்பட்டது. இதேபோல் நாராயணநகர், களரம்பட்டி, கருங்கல்பட்டி, பழைய பஸ் ஸ்டாண்ட், கிச்சிப்பாளையம், சித்தேஸ்வரா உள்பட தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 92 மில்லி மீட்டர் மழை பெய்தது. சேலம் 85.60, ஆணைமடுவு 49, சங்ககிரி 45.20, கெங்கவல்லி 20, ஏற்காடு 17.80, வீரகனூர் 9, ஓமலூர் 7, மேட்டூர் 6.80, எடப்பாடி 5.23, தலைவாசல் 5, கரியகோவில் 3, காடையாம்பட்டி 2.50, ஆத்தூர் 2, பெத்தநாயக்கன்பாளையம் 1 என்ற மில்லி மீட்டர் அளவில் மொத்தம் 351.13 மில்லி மீட்டர் மழை பெய்தது.

The post சேலத்தில் 351.13 மில்லி மீட்டர் மழை appeared first on Dinakaran.

Tags : Salem ,Dammampatti ,Dinakaran ,
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!