×

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை

சேந்தமங்கலம், செப்.2: புதுச்சத்திரம் அருகே, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார். புதுச்சத்திரம் ஒன்றியம், கல்யாணி ஊராட்சியில் சின்னதொட்டிப்பட்டி, ஆர்.புளியம்பட்டி ஆகிய பகுதிகளில் ₹16 லட்சத்தில், 10 ஆயிரம் கொள்ளளவு கொண்ட 2 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கௌதம் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி அன்பழகன் முன்னிலை வகித்தார். ராமலிங்கம் எம்எல்ஏ, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணியை துவக்கி வைத்தார். மேலும், அப்பகுதி மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு தலைவர் சாந்தி வெங்கடாசலம், துணைத்தலைவர் ராம்குமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேன்மொழி செந்தில்குமார், ஒன்றிய துணை செயலாளர் ராஜசேகர், மனோகரன், செந்தில்குமார், குமார், சிவக்குமார், வழக்கறிஞர் சுகுமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை appeared first on Dinakaran.

Tags : Bhumi ,Puja ,Senthamangalam ,MLA ,Ramalingam ,Puduchattaram ,Puduchattaram Union ,Bhoomi Pooja ,Dinakaran ,
× RELATED குடிசை வீடு தீயில் எரிந்து சாம்பல்