×

ராயக்கோட்டை ஸ் நிலைய நுழைவு வாயிலில் தேங்கும் மழைநீர் துமக்கள் அவதி

ராயக்கோட்டை, செப்.1: ராயக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் பகுதியில், நேற்று முன்தினம் பெய்த மழைக்கு சாக்கடை கழிவுநீர் கலந்த தண்ணீர் சாலையில் பல இடங்களில் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
ேசலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக வந்து ஓசூர், பெங்களூரு செல்லும் வாகனங்கள் அனைத்தும் ராயக்கோட்டை வழியாக செல்கிறது. ராயக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த கனமழைக்கு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் மழைநீருடன் கலந்து சாலையில் ஓடியது. ஆங்காங்கே சாலையில் உள்ள பள்ளங்களில் இந்த கழிவுநீர் தேங்கியது. இதனால் ராயக்கோட்டையில் தர்மபுரி சாலை அண்ணா சிலை பகுதியில் இருந்து, பஸ் நிலையம் நுழைவு வாயில் வரையிலும் பல இடங்களில் மழைநீர் பள்ளங்களில் தேங்கியது.

டூவீலர், கார், பஸ் மற்றும் கனரக லாரிகள் வேகமாக செல்லும் போது இந்த பள்ளங்களில் தேங்கிய கழிவுநீர் சாலையில் நடந்து மற்றும் டூவீலர்களில் செல்பவர்கள் மீது தெரித்தது. கடும் நுர்நாற்றம் வீசுவதுடன், கொசுகள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு அபாயம் நிலவுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து ஊராட்சி செயலர் சந்திரகுமாரி கூறுகையில், ‘புதிய வீடு கட்டும் வேலைகள் நடப்பதால், அங்குள்ள கழிவுநீர் காவாய்களில் அடைப்பு ஏற்பட்டு, மழையின் போது கழிவுநீர் வெளியேறியுள்ளது. அதை சரி செய்து விட்டோம். இனி கழிவுநீர் கலக்காதபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பஸ் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,’ என்றார்.

The post ராயக்கோட்டை ஸ் நிலைய நுழைவு வாயிலில் தேங்கும் மழைநீர் துமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Rayakottai station ,Rayakottai ,
× RELATED ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை