×

தளியில் பாஜ ஆர்ப்பாட்டம்

தேன்கனிக்கோட்டை, செப்.1: தளி மின்வாரிய அலுவலகம் முன்பு பாஜ சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் ஹரிஷ் தலைமை வகித்தார். ஒன்றிய பொதுச்செயலாளர் ஹரிஷ் ரெட்டி வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் ராஜண்ணா, மாவட்ட செயலாளர் பார்த்திபன், ஆனந்த் மற்றும் ஒன்றிய தலைவர் சிவாஜி, வெங்கடேஷ், கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, தளி பகுதியில் மின்அழுத்த குறைபாடு மற்றும் தட்கல் திட்டத்தில் பணம் கட்டியுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கக்கோரியும், தளி சுற்றுப்புற பகுதிகளில் குறைந்த அழுத்தம் உள்ள கிராமங்களுக்கு புதிய டிரான்ஸ்பார்மர்களை அமைத்து தரவேண்டும். விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டும் என கோஷமிட்டனர். மார்க்கண்டேஸ்வரர் நன்றி கூறினார்.

The post தளியில் பாஜ ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Thali ,Dhenkanikottai ,Thali Power Board ,Harish ,Dinakaran ,
× RELATED ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை