×

நேற்றிரவு ஏற்பட்ட காய்ச்சலால் கர்நாடக மாஜி முதல்வர் அட்மிட்

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடகா முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமிக்கு, இன்று அதிகாலை திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று அவர் கோலார் மாவட்டம் சீனிவாசபூருக்குச் செல்வதாக இருந்தது. ஆனால் அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதால், தற்போது அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. முன்னதாக கடந்த சட்டசபை தேர்தலின் போது, ​​குமாரசாமிக்கு காய்ச்சல், நுரையீரல் தொற்று ஏற்பட்டது. அப்போது சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். தேர்தலுக்குப் பிறகு, தனது குடும்பத்துடன் ஐரோப்பாவிற்கும், தனது நண்பர்களுடன் கம்போடியாவிற்கும் சென்று திரும்பினார். அதன் மாநில சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற அவர், மிகவும் ஆரோக்கியமாக காணப்பட்டார். இதற்கிடையில் வருகிற லோக்சபா தேர்தல் தொடர்பாக கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

The post நேற்றிரவு ஏற்பட்ட காய்ச்சலால் கர்நாடக மாஜி முதல்வர் அட்மிட் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Maji Chief Admit ,Bengaluru ,Former ,Chief of ,Karnataka Kumarasamy ,Principal ,Maji Chief Minister Admit ,Dinakaran ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி