×

மருங்காபுரி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

 

திருச்சி, ஆக.29: திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டாரம் தேனுார் கிராமத்தில் கலைஞாின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் கிராம வேளாண் முன்னேற்றக்குழு சார்பில் பருவ நிலைக்கு முந்தைய விவசாயிகள் பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநா் கோமதி தலைமை வகித்து, வேளாண்மை துறை சா்ந்த திட்டங்கள், உயிர் உரங்கள் பயன்பாடுகள், பருவநிலைக்கு ஏற்ற சாகுபடி முறைகள், அறுவடை பின்சார் தொழில் நுட்பங்கள், இயற்கை வேளாண்மை சாகுபடி தொழில்ட்பங்கள் குறித்து விளக்கினார்.

மருங்காபுரி வட்டார வேளாண்மை அலுவலா் அருண் ஜீலியஸ் விவசாயிகளுக்கு உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல், இடுபொருட்கள் பதிவு செய்யும் முறைகள், சிறுதானியங்கள் உற்பத்தி மற்றும் மதிப்புக்கூட்டுதல், நுண்ணீர் பாசனம் அமைத்தல் குறித்து பேசினார். துணை வேளாண்மை அலுவலா் வேல்முருகன், சம்பா சாகுபடி நெல் ரகங்கள் தோ்வு மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள், குறுவை மாற்றுப்பயிர் திட்டங்கள், விதைப்பண்ணை அமைத்தலின் முக்கியத்துவங்கள் குறித்து விளக்கினர். உதவி வேளாண்மை அலுவலா் செந்தில்குமார் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலா்கள் செய்திருந்தனா். பயிற்சியில் 25க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post மருங்காபுரி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Marungapuri ,Tiruchi ,Kalaigna ,Thenur village ,Tiruchi district ,Dinakaran ,
× RELATED தாசில்தாரின் கார் மோதி வாலிபர் பலி