×

கலைஞர் நூற்றாண்டு கொடியேற்று விழா

ராசிபுரம், ஆக. 27: ராசிபுரத்தில் நகர திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவையாட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர், திமுக கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினர். ராசிபுரம் நகர செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். நிகழ்வில் நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர், மாவட்ட பொருளாளர் பாலச்சந்தர், மாநில மருத்துவ அணி துணைச்செயலாளர் ராஜேஷ்பாபு, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கசாமி, அவைத் தலைவர் வைத்தீஸ்வரன், மாவட்ட பிரதிநிதி ஆனந்தன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் விநாயகமூர்த்தி, ராசிபுரம் நகர்மன்ற உறுப்பினர்கள், நகர வார்டு செயலாளர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், நகர வார்டு பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு கொடியேற்று விழா appeared first on Dinakaran.

Tags : Artist Centenary Flag Hoisting Ceremony ,Rasipuram ,DMK ,Dinakaran ,
× RELATED குடிசை வீடு தீயில் எரிந்து சாம்பல்