×

டெல்லி ஜி-20 மாநாட்டில் புடின் பங்கேற்க மாட்டார்: கிரெம்ளின் மாளிகை தகவல்

மாஸ்கோ: இந்தியா தலைமையில் ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 8 முதல் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. உக்ரைனில் நடத்தப்படும் மனித உரிமை மீறல் தொடர்பாக புடின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால் அவர் சமீபத்தில் நடந்து முடிந்த, 15வது பிரிக்ஸ் மாநாட்டிலும் நேரில் பங்கேற்பதை தவிர்த்து, வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை மட்டும் பிரதிநிதியாக அனுப்பி இருந்தார்.

இந்நிலையில், இந்தியாவில் செப்டம்பர் 9-10 தேதிகளில் டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் அதிபர் புடின் பங்கேற்கும் திட்டம் எதுவுமில்லை. அவர் பங்கேற்பதாக இருந்தால் அது குறித்து பின்னர் தகவல் தெரிவிக்கப்படும் என்று கிரெம்ளின் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்ததாக, ரஷ்ய அரசின் டாஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

The post டெல்லி ஜி-20 மாநாட்டில் புடின் பங்கேற்க மாட்டார்: கிரெம்ளின் மாளிகை தகவல் appeared first on Dinakaran.

Tags : Putin ,Delhi G-20 ,Kremlin House ,Moscow ,India-led G-20 Summit ,Delhi ,Delhi G-20 conference ,Dinakaran ,
× RELATED 24 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியாவில்...