சேந்தமங்கலம், ஆக.20: தாத்தையங்கார்பட்டி ஊராட்சியில், ₹41.13 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ராஜேஷ்குமார் எம்பி தொடங்கி வைத்தார். புதுச்சத்திரம் ஒன்றியம், தாத்தையங்கார்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ₹41.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிமெண்ட் சாலை, கழிவுநீர் வாய்க்கால், அங்கன்வாடி மையம், கதிர் அடிக்கும் தளம், தடுப்பு சுவர் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான பூமி பூஜைக்கு ஒன்றிய செயலாளர் கௌதம் தலைமை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ் குமார் எம்பி கலந்துகொண்டு, வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்து, அப்பகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
தொடர்ந்து, 100 நாள் வேலை செய்யும் பெண்களிடம் அவர் பேசுகையில், ‘கலைஞரின் உரிமை தொகை அனைத்து பெண்களுக்கும் நிச்சயம் கிடைக்கும். ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராம சாலைகளை மேம்பாடு செய்ய, முதல்வர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தை கொண்டு வந்து, மண் சாலைகள் இல்லாத நிலையை உருவாக்கி, அனைத்து பகுதிகளுக்கும் தார் சாலை அமைத்துக் கொடுக்கப்பட்டு வருகிறது,’ என்றார். நிகழ்ச்சியில், மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத், பொதுக்குழு உறுப்பினர் சுசிதரன், தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய குழு தலைவர் சாந்தி வெங்கடாஜலம், துணை தலைவர் ராம்குமார், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி முருகேசன், துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, கவிதா முருகேசன், குமார், பாபு, சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post ₹41.13 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் appeared first on Dinakaran.
