
- பாஜக
- காங்கிரஸ்
- துணை முதல்வர்
- டி.கே.சிவகுமார் சுசாகா
- பெங்களூரு
- கர்நாடக சட்டமன்றத் தேர்தல்கள்
- மக்களவை
- கர்நாடக
- துணை
- முதல்வர்
- டி.கே.சிவகுமார் சுசாகா
- தின மலர்
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜவை வீழ்த்தி காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. அடுத்த ஆண்டு நடக்கும் மக்களவை தேர்தலில் குறைந்தது 20 தொகுதிகளில் வெற்றி பெறும் முனைப்பில் தீவிரமாக பணியாற்றிவருகிறது. இதற்கிடையே பா.ஜ எம்எல்ஏக்களை காங்கிரசில் இணைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக துணை முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான டி.கே.சிவகுமாரிடம் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டி.கே.சிவகுமார், அரசியல் தலைவர்கள் இந்தியாவை பாதுகாக்க வேண்டும். அவர்களது அரசியல் வாழ்வில் வளர வேண்டும் என்று நினைத்தால் நல்ல முடிவை எடுக்க வேண்டியது அவசியம். யாரால் அவர்களை தடுக்க முடியும்? மத்திய பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை பாஜ கலைத்தது. அது சரியா? அரசியல் தலைவர்கள் அவர்களது தேவையை பொறுத்து முடிவெடுப்பார்கள். என்னை யார் யார் சந்தித்தார்கள், என்ன பேசினோம் என்று நான் சொல்ல வேண்டுமா என்ன? என்றார்.
The post கர்நாடகா மாநிலத்தில் காங்கிரசில் இணையும் பா.ஜ எம்எல்ஏக்கள்? துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் சூசக தகவல் appeared first on Dinakaran.