×

பொது இடத்தில் ஆண்கள் முகத்தை பார்த்தால் பெண்கள் மதிப்பை இழக்க நேரிடும்: தலிபான் அதிகாரி விளக்கம்

காபூல்: பொது இடங்களில் பெண்களின் முகத்தை ஆண்கள் பார்த்தால் பெண்கள் மதிப்பை இழக்கிறார்கள் என்று ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் முகமது சாதிக் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் 2021 ஆகஸ்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள், பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்று குறிப்பிட்டனர். இதுபற்றி தலிபான்களின் நல்லொழுக்க அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மோல்வி முகமது சாதிக் அகிப்அளித்த பேட்டியில், ‘பெண்களின் முகம் பொதுவில் தெரிந்தால், பிட்னா அல்லது பாவத்தில் விழும் வாய்ப்பு உள்ளது. பெரிய நகரங்களில் பெண்களை ஹிஜாப் இல்லாமல் பார்ப்பது மிகவும் மோசமானது. மேலும் பெண்களின் முகங்கள் மறைக்கப்பட வேண்டும் என்பதை எங்கள் அறிஞர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

அதற்காக பெண்களுடைய முகம் பாதிக்கப்படும் என்பதல்ல. ஒரு பெண்ணுக்கு அவளுடைய சொந்த மதிப்பு இருக்கிறது. அந்த மதிப்பு ஆண்கள் அவளைப் பார்ப்பதால் குறைகிறது. பெண்கள் பூங்காவிற்கு செல்லலாம், ஆனால் ஆண்கள் இருந்தால், ஷரியா அதை அனுமதிக்காது. பெண்ணால் விளையாட முடியாது, பூங்காவிற்கு செல்ல முடியாது என்று நாங்கள் கூறவில்லை. இவை அனைத்தையும் செய்ய முடியும். ஆனால் சில பெண்கள் விரும்புவது போல், அரை நிர்வாணமாகவும், ஆண்கள் மத்தியிலும் தான் இதை செய்ய முடியாது’ என்று அவர் தெரிவித்தார்.

The post பொது இடத்தில் ஆண்கள் முகத்தை பார்த்தால் பெண்கள் மதிப்பை இழக்க நேரிடும்: தலிபான் அதிகாரி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Taliban ,Kabul ,Afghanistan ,Taliban government ,
× RELATED ஈரானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக...