×

பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

 

உளுந்தூர்பேட்டை, ஆக. 14: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாரதனைகள் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டை கைலாசநாதர் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.

இதில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதல் நிறைவேற நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர். இதேபோல் உளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் கோயில், எலவனாசூர் கோட்டை அர்த்தநாரீஸ்வரர் கோயில், நெய்வனை சொர்ணகடேஸ்வரர் கோயில், ஆதனூர் அருணாசலேஸ்வரர் கோயில்.
திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில், சேந்தமங்கலம் ஆபத் சகாயேஸ்வரர் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பிரதோஷ வழிபாடு நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக இளைஞர்கள் செய்திருந்தனர்.

The post பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Shiva ,Pradosha ,Ulundurpet ,Kallakurichi district ,Shiva temples ,
× RELATED ஓட்டலில் மனித கறி கேட்டு தகராறு சமையல் மாஸ்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு