×

மூதாட்டியிடம் 5 பவுன் நகை கொள்ளை

 

பெரம்பலூர், ஆக.12: பெரம்பலூர் நகராட்சி, மதர்ஸா ரோடு, சூர்யா நகரைச் சேர்ந்தவர் அப்துல் அஜீஸ் மனைவி ரஜியா பேகம்(75). இவரது வீட்டுக் காரர் இறந்து 2 வருடம் ஆகிறது இவர்களுக்கு குழந்தைகள் ஏதுமில்லை. தற்போது தனியாக தான் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு 7.20 மணியளவில் ரஜியாபேகம் வீட்டிற்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் வந்துள்ளனர். ஆண்நபர் ரஜியாபேகம் நீங்கள் யாரெனக் கேட்கும் முன்பாக, எதிர்பாராத நேரத்தில் ரஜியா பேகத்தின் தலையில் அடித்துத் தாக்கியுள்ளார்.

அப்போது கூட வந்த பெண் ரஜியா பேகத்தின் ரூ.2.25 லட்சம் மதிப்பிலான, 5 பவுன் தங்கவளையல் களை பிடுங்கி எடுத்துக் கொண்டு இருவரும்சிறிது நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்று தலை மறைவாகி விட்டனர். சிறிதுநேரம் கழித்து ரஜியா பேகத்தின் அலறல் சத்தம்கேட்டு, அக்கம் பக்கத்து வீட்டார் ஓடிச் சென்றுபார்த்து விசாரித்து அவரை பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தலையில் எட்டு தையல் போடப்பட்டு, உள் நோயாளியாகத் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக தகவலறிந்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மூதாட்டியிடம் 5 பவுன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Abdul Aziz ,Razia Begum ,Surya Nagar, Madrasa Road, Perambalur Municipality ,
× RELATED பெரம்பலூரில் 26ம் தேதி மாற்றுத்...