×

தெற்கு மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்

 

ஈரோடு, ஆக.4: ஈரோடு மாநகராட்சி 9வது வார்டில் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பொதுமக்களுக்கு நேற்று முன்தினம் இரவு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழா, தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா, திமுக அரசின் 2 ஆண்டு ஆட்சியின் சாதனை விழா என முப்பெரும் விழாவை முன்னிட்டு, ஈரோடு மாநகராட்சி, பெரிய சேமூர் பகுதி கழகம், 9வது வார்டு பொதுமக்களுக்கு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 9வது வார்டுக்கு உள்பட்ட பாரதியார் நகர், காரப்பாறை பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணைமேயர் செல்வராஜ், மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம், 9வது வார்டு கவுன்சிலர் ஜெகநாதன் மற்றும் பகுதி நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

The post தெற்கு மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Southern District DMK ,Erode ,Housing Minister ,S.Muthusamy ,9th Ward ,Erode Corporation ,
× RELATED நாகதேவம்பாளையம் ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா