×

பிரதமர் மோடியுடன் சித்தராமையா சந்திப்பு: திட்டங்களுக்கு நிதி ஒதுக்க கோரிக்கை

பெங்களூரு: டெல்லியில் பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்தித்து பேசினார். அப்போது மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யும்படி கேட்டு கொண்டார். கர்நாடக முதல்வராக பதவியேற்பவர்கள் மரியாதை நிமித்தமாக நாட்டின் பிரதமரை சந்தித்து பேசுவது வழக்கம். இதன்படி டெல்லி சென்ற முதல்வர் சித்தராமையா, நேற்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது பிரதமருக்கு சந்தன மரத்தில் தயாரிக்கப்பட்ட மைசூரு தங்க அம்பாரி பரிசு வழங்கினார். சந்தனமாலை மற்றும் மைசூரு தலைப்பாகை, பட்டு சால்வை அணிவித்தார். அதை பிரதமர் மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டார்.

மாநில முதல்வராக பொறுப்பேற்றபின் முதல்முறையாக பிரதமரை சந்தித்து பேசிய முதல்வர், ஒன்றிய அரசின் சார்பில் மாநிலத்தில் செயல்படுத்தி வரும் வளர்ச்சி திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரி்க்கைகளை முன் வைத்தார். குறிப்பாக அன்னபாக்யா திட்டத்திற்கு தேவையான அரிசி மத்திய தொகுப்பில் இருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார். பெங்களூரு புறநகர் ரயில் திட்டம், மாநிலத்தில் செயல்படுத்தி வரும் நீர்பாசனம், ஜல்ஜீவன், தேசிய நெடுஞ்சாலை, அம்ருத்சிட்டி மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கான மானியம் ஒதுக்கீடு செய்வது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைளை பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைத்தார். முடிந்த வரை மாநிலத்தில் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு உறுதுணையாக இருக்கும் என்று முதல்வரிடம் பிரதமர் உறுதியளித்தாக சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் முதல்வர் தெரிவித்தார்.

The post பிரதமர் மோடியுடன் சித்தராமையா சந்திப்பு: திட்டங்களுக்கு நிதி ஒதுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sidaramaiah ,PM Modi ,Bengaluru ,Karnataka ,Chief Minister ,Sitaramaiah ,Modi ,Delhi ,Siddaramaiah ,Dinakaran ,
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி