×

தண்டவாளத்தில் லாரி சிக்கியதால் ரயில்கள் 5 மணிநேரம் நிறுத்தம்

*ஆந்திராவில் பயணிகள் அவதி

திருமலை : ஆந்திராவில் தண்டவாளத்தில் லாரி சிக்கியதால் 5 மணி நேரத்திற்கும் மேலாக ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம், பூரிட்டிபெண்டாவில் பசுமை வழிப்பாதை நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் ஒரு சில கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் நேற்று காலை அதிக பாரத்தை ஏற்றி வந்த ஒரு லாரி, அவ்வழியாக ரயில்வே கேட்டை கடந்து மற்றொரு பாதைக்கு செல்ல முயன்றது. ஆனால் அதிக பாரம் காரணமாக தண்டவாளத்தையொட்டி உள்ள பள்ளங்களில் டயர்கள் சிக்கி தண்டவாளத்தில் ரயில்கள் செல்ல முடியாதபடி லாரி நின்றது. அங்கிருந்தவர்கள் லாரியை மீட்க முயன்றனர்.

நீண்ட நேரம் போராடியும் மீட்க முடியவில்லை. இதனால் உடனே அப்பகுதி ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அவ்வழியாக வந்த அனைத்து ரயில்களையும் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தினர். இதனை தொடர்ந்து அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள், போலீசார் ஜேசிபி கொண்டு வந்து தண்டவாளத்தில் சிக்கிய லாரியை போராடி மீட்டனர். இதையடுத்து சுமார் 5 மணி நேரத்திற்கு பின் ரயில்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டு சென்றது. ரயில்கள் நடுவழியில் நின்றதால் பயணிகள் கடுமையாக அவதிக்குள்ளாகினர்.

The post தண்டவாளத்தில் லாரி சிக்கியதால் ரயில்கள் 5 மணிநேரம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Greenway Highway ,Puritipenda, Vijayanagaram District, Andhra State ,
× RELATED ஆந்திராவில் ஆட்சியை பிடித்த நிலையில்...