×

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஷோகாஸ் நோட்டீஸ்: வெளியுறவு அமைச்சகம் அதிரடி

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பலாத்காரம் செய்த வீடியோக்கள் வைரலாக தொடங்கியதுமே, இந்த வழக்கிலிருந்து தப்பிக்கும் விதமாக ஏப்ரல் 27ம் தேதி அவர் வெளிநாட்டிற்கு தப்பிவிட்டார். இந்நிலையில், பிரஜ்வலுக்கு எதிராக இன்டர்போல் புளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டது. ஆனாலும் அவர் வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் நிலையில், அவரது பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகத்திற்கு எஸ்.ஐ.டி கடிதம் எழுதியது.

இந்நிலையில், டிப்ளோமேடிக் பாஸ்போர்ட்டை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்று கேட்டு பிரஜ்வலுக்கு வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரஜ்வல் விவகாரம் குறித்து பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாஸ்போர்ட் சட்டப்படி தான் ரத்து செய்ய முடியும். அதற்கு நீதிமன்றம் அல்லது காவல் துறை கோரிக்கை தேவை. அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மே 21ம் தேதி வெளியுறவு அமைச்சகத்திற்கு கிடைத்தது. அதன்பின்னர் உடனடியாக அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மே 23ம் தேதிதான் அதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டன என்று ஜெய்சங்கர் கூறினார்.

The post பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஷோகாஸ் நோட்டீஸ்: வெளியுறவு அமைச்சகம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Prajwal Revanna ,Ministry of External Affairs ,Bengaluru ,Karnataka ,Interpol Blue ,Prajwal ,Dinakaran ,
× RELATED நாட்டை உலுக்கிய பாலியல் புகாரில்...