×

மணிப்பூர் கலவரத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலகக்கோரி மாநகர் காங். மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

 

கோவை, ஜூலை 27: கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், மணிப்பூர் கலவரத்துக்கு பொறுப்பு ஏற்று பிரதமர் மோடி பதவி விலகக்கோரி, காங்கிரஸ் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் கீதா ஹால் ரோட்டில் உள்ள அதன் அலுவலகம் முன்பு நேற்று மெகுழுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் வக்கீல் கருப்புசாமி, மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், வீனஸ் மணி, மாநகராட்சி கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சங்கர், நிர்வாகிகள் கோவை போஸ், தமிழ்செல்வன், இராம.நாகராஜ், தாமஸ் வர்க்கீஸ், ஜெயபால், காந்தகுமார், குறிச்சி வசந்த், கோட்டை செல்லப்பா, அரோமா நந்தகோபால், கணேசன், ஷேக் முகமது, முருகன், ஜேம்ஸ் ஜெயக்குமார், ஆர்.வி.எஸ். சக்திவேல், அசோக்குமார், முஸ்தபா, ஆவின் சந்திரன், அரிமா ஆறுமுகம், டென்னிஸ் செல்வராஜ், அஸ்மத்துல்லா, பர்வேஸ், அமீன், நசீர், அபு, சுதன், தீபக், நவீன், சிங்காரம், என்ஜிஆர் செல்வம், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், இஸ்மத், சின்னசாமி, கனகராஜ், சச்சின் சிவக்குமார், கே.ஆர்.கண்ணன், சற்குணம், உதயராஜ், தினகரன், உமாராணி, சண்முகம், வெங்கடேஷ், நாராயணன், திலகவதி, மாலதி, லீமா ரோஸ், சாலியா, சிவபெருமாள், அனிதா, சலீம், பீட்டர், மோகன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post மணிப்பூர் கலவரத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலகக்கோரி மாநகர் காங். மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Managar Congress ,PM Modi ,Manipur riots ,Coimbatore ,Coimbatore District Congress ,Modi ,Dinakaran ,
× RELATED ரெமல் புயல் முன்னெச்சரிக்கை...