×

பக்தர்கள் வழிபாடு காவிரி ஆற்றங்கரையில் மொழியாளன் முனியப்ப சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் அருகே காவிரி ஆற்றங்கரையில் மொழியாளன் முனியப்ப சுவாமி கோயிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முனிநாதபுரம் காவிரி ஆற்றங்கரையில் அந்தப் பகுதி பொது மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் முனியப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள முனியப்பசாமிக்கு ஆடி மாத முதல் ஞாயிறு முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதேபோல் அருகாமையில் உள்ள முனீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்களும், பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு முனியப்பசாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

The post பக்தர்கள் வழிபாடு காவிரி ஆற்றங்கரையில் மொழியாளன் முனியப்ப சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Linguist Muniyappa Swamy ,river Cauvery ,Velayuthampalayam ,Linguyalan Muniyappa ,Swami ,Velayuthampalayam.… ,Linguyalan Muniyappa Swamy ,Cauvery river ,
× RELATED வேலாயுதம்பாளையம் அருகே மது விற்ற முதியவர் கைது