×

100 ஹெக்டர் இலக்கு ஒதுக்கீடு

கடலூர், ஜூலை 20: கடலூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம், எண்ணெய் பனை திட்டத்தின்கீழ் 75 எக்டர் அளவில் புதிய பரப்பு விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்பட்டது. அது போன்றே நடப்பு வருடம் 2023-24ம் ஆண்டில் 100 ஹெக்டர் அளவில் இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் பனை பயிரானது நடவு செய்ததில் இருந்து மூன்று ஆண்டுகளில் மகசூல் தரவல்லது. அவ்வாறு அறுவடை செய்யப்படும் எண்ணெய் பனை குலைகள், அரசு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையாக டன் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு விற்பனை செய்வதில் சிரமம் இன்றி கையாள முடிகிறது.

எண்ணெய் பனை நடவு விழாவில் முக்கிய பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்துகொள்ள உள்ளனர். விழாவில் பங்கேற்று மானியம் பெற விரும்பும் பயனாளிகள் கணினி சிட்டா, அடங்கல், புகைப்படம் இரண்டு, பண்னை வரைபடம் மற்றம் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து உழவன் செயலி மூலம் பதிவு செய்தும் எண்ணெய் பனை நடவு விழாவில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது, என தெரிவித்துள்ளார்.

The post 100 ஹெக்டர் இலக்கு ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Deputy Director ,Horticulture ,Cuddalore District ,Arun ,Dinakaran ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் தோட்டக்கலை தகவல் மையம் அமைப்பு