×

தூக்கில் சடலமாக கிடந்தார் 10ம் வகுப்பு மாணவன் மர்ம சாவு

வேப்பூர், ஜூலை 18: விருத்தாசலம் அருகே ஊமங்கலம் அடுத்துள்ள குப்பநத்தம்நல்லூர் ரோடு இருப்புக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகன் சந்துரு (15). இவர் அதே ஊரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டு வெளியே சென்ற சந்துரு இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இதற்கிடையே இயேசுதாஸ் என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பில் உள்ள முந்திரி மரத்தில் இரவு 7 மணி அளவில் சந்துரு தூக்குப்போட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஊமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து மாணவனின் இறப்புக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி மாணவனின் தந்தை கூறும்போது, தனது மகன் பள்ளியில் நன்றாக படிக்க கூடிய மாணவன், அங்கு எந்த பிரச்னையும் இல்லை.

அதேபோல் வீட்டில் உள்ளவர்களிடமும் பாசமாக இருப்பான், நேற்று முன்தினம் காலை கூட தனது அக்காவிடம் நன்றாக பேசிக்கொண்டிருந்தான். பின்னர்தான் வெளியே சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றிருக்கிறான். ஆனால் அதற்குள் மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் அவனது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவனது சாவில் மர்மம் உள்ளது. போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கதறி அழுதபடியே கூறினார். மாணவனின் சடலத்தைப்பார்த்து பெற்றோர், சகோதரிகள், உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இச்சம்பவம் அக்கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

The post தூக்கில் சடலமாக கிடந்தார் 10ம் வகுப்பு மாணவன் மர்ம சாவு appeared first on Dinakaran.

Tags : Veypur ,Govindaraj ,Kuppanathamnallur Road, Bulakurichi ,Oomangalam ,Vrudhachalam ,
× RELATED ஓட்டலில் மனித கறி கேட்டு தகராறு சமையல் மாஸ்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு