- முதல் அமைச்சர்
- குன்ராதூர்
- காஞ்சிபுரம்
- குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம்
- கலாச்செல்வி மோகன்
- தின மலர்
காஞ்சிபுரம்: முதல்வரின் முகவரி தொடர்பான ஆய்வு கூட்டம் குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலைச்செல்வி மோகன் பங்கேற்றார். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், முதலமைச்சர் இணைய வழி சேவையான முதல்வரின் முகவரியில் பெறப்படும் மனுக்கள் மீது தரமான தீர்வுகள் அளிப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கூட்டத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்வது மற்றும் உரிய பதிலினை மனுதாரருக்கு தெரிவிப்பது தொடர்பாக விரிவான அறிவுரைகள் கலெக்டரால் வழங்கப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணகண்ணன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post குன்றத்தூரில் முதல்வரின் முகவரி ஆய்வு கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு appeared first on Dinakaran.
