![]()
சியோல்: தென்கொரியாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. சில இடங்களில் நிலச்சரிவால் வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.
மத்திய நகரமான சியோங்ஜுவில் சுரங்கப்பாதையில் 4 அடி உயரத்துக்கு தேங்கி நிற்கும் மழை நீரில் ஏராளமான வாகனங்கள் சிக்கி கிடக்கின்றன. மின்சாரம் இன்றி 27,260 வீடுகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன.
தொடர் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 33 பேர் உயிரிழந்து விட்டனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். பலர் காணாமல் போய் விட்டதாக கூறப்படுகிறது. 6,100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேற்றப்பட்டு உள்ளனர்.
The post தென்கொரியாவில் கனமழைக்கு 33 பேர் பலி appeared first on Dinakaran.
