- மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில்
- ஆதிபுர பிரமோத்சவா
- மன்னார்குடி
- ஆதிபுர பிரமோத்சவா
- மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில்
- ஆடிபுர பிரமோத்சவ விழா
மன்னார்குடி, ஜூலை 15: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பூர பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 22ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ தலமான ராஜகோபாலசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் 10 நாட்கள் ஆடிப் பூர பிரம்மோற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா நேற்று கொடியேற் றத்துடன் துவங்கியது. இதையொட்டி கோயிலில் செங்கமலத்தாயார் சன்னதி முன்பு நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில் தீட்சிதர்கள் சிம்மம் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை ஆராதனை செய்து வேத மந்திரங்கள் முழங்க கோயில் தங்க கொடிமரத்தில் ஏற்றினர். அப்போது, தாயார் சர்வோ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களு க்கு அருள் பாலித் தார். பின்னர், ஒரே சமயத்தில் தாயாருக்கும் கொடிக்கும் அலங்கார தீபம் காட்டப்பட்டது. கொடியேற்றத்தை தொடர்ந்து செங்கமலத்தாயார் அன்ன வாகனம், வெள்ளி சேச வாகனம், சிம்ம வாகனம், கமல வாகனம், யானை வாகனம், புஷ்ப பல்லக்கு, குதிரை வாகன உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங் காரத்தில் தினந்தோறும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் 22ம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடு களை கோயில் செயல் அலுவலர் மாதவன், தீட்சிதர்கள், அந்தந்த மண்டகப் படி உபயதாரர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
The post ஆடிப்பூர பிரமோற்சவ விழாவை முன்னிட்டு மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் கொடியேற்றம் appeared first on Dinakaran.