×

போலீஸ் வந்ததால் மதுபாட்டில்களை வீசிவிட்டு ஓடிய ஆசாமிக்கு வலை போளூர் அருகே டாஸ்மாக் கடையில் திருட்டு

போளூர், ஜூலை 15: போளூர் அருகே டாஸ்மாக் கடையில் திருடிய மர்ம ஆசாமி, போலீஸ் ரோந்து வந்ததால் மதுபாட்டில்களை வீசிவிட்டு ஓட்டம் பிடித்தார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே மட்டப்பிறையூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த மதுபாட்டில்களை திருடி வந்துள்ளார். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சேத்துப்பட்டு போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது மதுபாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். இதையடுத்து மதுபாட்டில்களை போலீசார் மீட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

The post போலீஸ் வந்ததால் மதுபாட்டில்களை வீசிவிட்டு ஓடிய ஆசாமிக்கு வலை போளூர் அருகே டாஸ்மாக் கடையில் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Bolur ,Tasmac ,
× RELATED ஆட்டோ- தனியார் பஸ் மோதி பூண்டு வியாபாரிகள் 2 பேர் பலி: போளூரில் பரிதாபம்