அரூர், ஜூலை 15: மொரப்பூர் ஒன்றியம், கொசப்பட்டி ஊராட்சியில் எலவடை கொசப்பட்டி பெருமாள் கோயில் சாலை, துரைசாமி கவுண்டர் கொட்டாய் சாலை ஆகியவை, முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹50.82 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜை விழா நடந்தது. இதில் திமுக ஒன்றிய குழு தலைவர் சுமதி செங்கண்ணன், ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தார்சாலை பணிகளை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ராஜா, அன்பழகன், கேசவன், நடேசன், பத்மாகரன், துரைசாமி, நவின், கோவிந்தராஜ், சிவாஜி, இக்பால் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post ₹50.82 லட்சத்தில் தார்சாலை பணி appeared first on Dinakaran.